பிரித்தானியாவில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

by Lifestyle Editor

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு மற்றும் சவுத் வேல்ஸ், மிட்லாண்ட்ஸ், வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள், கிழக்கு ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் பயணிகள் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கனமழை காரணமாக பிரித்தானியாவின் மேற்குப் பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment