இந்த 3 விஷயங்கள் தான் தாம்பத்திய வாழ்க்கைக்கு அடிப்படை..

by Lifestyle Editor

திருமண வாழ்க்கையில் ஆரோக்கியமான உரையாடல் என்றென்றைக்கும் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொடக்கத்தில் ஒருவரை, ஒருவர் தெரிந்து புரிந்து கொள்வதற்கும், கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதற்கும் அல்லது ஆசைகளை பூர்த்தி செய்வதற்கும் உரையாடல் மிக அவசியமானது.

அதே சமயம், திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதியர்கள் பலர், தங்கள் பாலியல் தேவைகள் குறித்து வாழ்க்கைத் துணையிடம் உரையாடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். நாம் எதையோ சொல்லப் போக, அது நம் பார்ட்னரின் மனதை புண்படுத்திவிடுமோ என்ற எண்ணம் கணவருக்கும் இருக்கிறது, அதேபோல மனைவிக்கும் இருக்கிறது.

நம்பிக்கை : உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். உங்கள் ஆழ்மன உணர்வுகள் மற்றும் தேவைகளை நீங்கள் தெளிவாக எடுத்துரைக்காமல், அச்சத்துடன் இருக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதில் நம்பிக்கை ஏற்படாது.

பாதுகாப்பு கவலைகள் :

தம்பதியர்களில் யாராவது ஒருவருக்கு பால்வினை நோய்கள் இருப்பின் அதுகுறித்து உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல தாம்பத்ய வாழ்க்கையின்போது ஏற்படும் வலி மற்றும் அசௌகரியம் குறித்தும் நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். இல்லையென்றால் வலி, வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் மற்றும் அதனால் உறவுகளில் இருந்து விலகிச் சென்று விடுவீர்கள். இதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்படலாம்.

வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புநீங்கள் எதையும் வாயை திறந்து சொல்லாமலேயே, உங்களின் அனைத்து எதிர்பார்ப்புகள் குறித்தும் உங்கள் வாழ்க்கைத் துணை தெரிந்து வைத்திருப்பார் என்று எண்ணுவது தவறு. உங்கள் ஆசைகளையும், தேவைகளையும் உங்கள் வாழ்க்கைத் துணை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அதுகுறித்து நீங்கள் வாய்மொழியில் பேசியாக வேண்டும். பேசுவதற்கு தயக்கம் காட்டினால் உங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடும்.

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் : தாம்பத்ய வாழ்க்கை குறித்து உங்கள் வாழ்க்கைத் துணை முன்வைக்கும் ஆசைகள் மற்றும் அவர்களின் உடல்வாகு ஆகியவை குறித்து தேவையற்ற மலிவான விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணை தன்னுடைய ஆசைகளையும், தேவைகளையும் எடுத்துக் கூறும்போது அதனை பொறுமையாக கேடக் வேண்டும். முதலில் அவர்கள் பேசுவதற்கு இடமளிக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் மனம் விட்டு உரையாடும்போது அதனை பாராட்டுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். நேர்மறையான புரிதல் நல்லெண்ண உறவை வளர்க்கும். தவறான புரிதல் கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எதிர்மறையான பாதையில் பயணம் செய்யத் தொடங்கிவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment