94
கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்தி செலவுகளுக்கு மேலதிகமாக பல விநியோகஸ்தர்கள் பொருட்களுக்கு அதிக விலைகள் நிர்ணயித்து வருவதாக பிரித்தானியாவின் போட்டி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இதுவே உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது என போட்டி மற்றும் சந்தைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
10 வகை பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதிக உணவு விலையானது பணவீக்கம் காரணமாக அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் உர செலவுகளால் உந்தப்பட்டதாக குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதன் காரணமாக முக்கால்வாசி விநியோகஸ்தர்கள் தனிப்பட்ட தயாரிப்புகளில் அதிக லாபம் ஈட்டுகின்றனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.