பிக்பாஸ் வைல்டு கார்டு என்ட்ரியை வினுஷா மறுத்தாரா..!

by Lifestyle Editor

பிக் பாஸ் 7தமிழ் ,ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.

புது ரூல்ஸ், பிக்பாஸ் வீட்டிற்குள் ஸ்மால் பாஸ் என்ற பெயரில் இன்னொரு வீடு, புதுப்புது டாஸ்குகள் என பல புது விஷயங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில்தான் முதன்முறையாக டபுள் எவிக்ஷன் நடந்தது. முதன் முறையாக நடந்த இந்த எவிக்ஷனில் குறைவாக வாக்கு பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த வாரமும் இரண்டு எவிக்ஷன்கள் நடந்தது. அதில், ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வைல்டு கார்டு எண்ட்ரீ: இதனிடையே தற்போது கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன் ஆகியோர் உள்ளே உள்ளனர்.

அதேசமயம் ஏற்கனவே வெளியே தள்ளப்பட்ட அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகிய இருவரும் மீண்டும் உள்ளே நுழைந்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான அறிவிப்பில், மூன்று போட்டியாளர்கள் திரும்பி வரப்போகிறார்கள் என சொல்லப்பட்டது. அதில் இரண்டு பேர் மட்டுமே வந்த நிலையில் மூன்றவதாக உள்ளே வருவார் என கணிக்கப்பட்ட வினுஷா தேவி பிக் பாஸ் இல்லத்திற்குள் வரவே இல்லை. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது வினுஷா தேவி வைல்டு கார்டு என்ட்ரிக்கு மறுப்பு தெரிவித்ததற்கு முக்கிய காரணம் “பிக்பாஸ் வீட்டில் அவர் எதுவுமே பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி சேனல் வெளியிட்ட வீடியோவில் வினுஷா மிக்ஸர் சாப்பிடுகிறார் என கலாய்த்து பதிவு வெளியிட்டனர், பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது.

இந்த காரணங்களைத் தவிர நிக்ஸன் உருவக்கேலி செய்ததும் அவர் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதனால் நொந்துப்போன வினுஷா வைல்டு கார்டு வாய்ப்பை மறுத்தார் என்ற தகவல் இணைத்தில் கசிந்துள்ளது.

மேலும் வினுஷாவை அடுத்து யுகேந்திரனும் இந்த பட்டியலில் இருந்துள்ளார் ஆனால் அவர் பிரதீபுக்கு ஆதரவாக பேசியிருப்பதால் நிகழ்ச்சி குழுவே அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment