பூர்ணிமா உடன் காதலா? வெளியில் வந்த பின் விஷ்னு இப்படி சொல்லிட்டாரே

by Lifestyle Editor

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளர்கள் காதல் வசப்படுவது வழக்கமான ஒன்று தான். சில போட்டியாளர்கள் காதலை வெளிப்படையாக பேசினாலும், சிலர் அதை கேமரா முன்பு சொல்லாமல் அது வெறும் பிரெண்ட்ஷிப் மட்டும் தான் என சொல்லி சமாளிப்பதும் உண்டு.

அப்படி சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 7ம் சீசனில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் நெருக்கம் காட்டினார்கள். மற்ற போட்டியாளர்கள் அது காதல் தான் என கூறினாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் பிக் பாஸுக்கு பிறகு விஷ்ணு தற்போது பேட்டி அளித்து இருக்கிறார். அதில் பூர்ணிமா உடன் இருந்தது காதலா என கேட்கப்பட்டு இருக்கிறது.

“எங்களுக்கு நடுவில் ஒரு bond இருந்தது. அவர் கேமராவுக்காக பல விஷயங்களை செய்தார். அவரை நம்பலாமா என எனக்கே சந்தேகம் எழுந்தது.”

“அதை பற்றி நானே வெளிப்படையாக கேட்டுவிட்டேன். எதாவது feeling இருக்கிறதா என நான் கேட்டேன், அதற்கு அவர் எதுவுமே சொல்லவில்லை. அதனால் விட்டுவிட்டேன்” என விஷ்ணு தெரிவித்து இருக்கிறார்.

Related Posts

Leave a Comment