குழந்தை பெற்ற பிறகு பெண்கள் எடுத்து கொள்ள வேண்டிய முக்கிய ஊட்டச்சத்துக்கள்..

by Lifestyle Editor

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பேறு என்பது மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, குழந்தை பெற்றெடுத்த பிறகும் சரி பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பல மாற்றங்களை சந்திக்கிறார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பிறகு பெண்கள் மனச்சோர்வு அல்லது மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது பேபி ப்ளூஸ் (Baby Blues) என்று குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு முதல் மூன்று வாரங்களில் ஏற்பட கூடிய உணர்வாக இருக்கிறது. குழந்தையை பெற்றெடுத்த பிறகு ஒருபக்கம் குறிப்பிட்ட பெண்ணுக்கு உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி தோன்றும். ஆனால் அதே சமயம் உடல் வலி, களைப்பு, காரணமேயின்றி மனசோர்வு, எரிச்சல் உணர்வு உள்ளிட்ட பல கலவையான உணர்வுகள் போன்றவை அடிக்கடி மேலோங்கும்.

இதனால் தாயின் அரவணைப்பு தேவைப்படும் புதிய குழந்தைக்கு உங்களின் கவனிப்பு அல்லது ஆதரவு போதுமான அளவு கிடைக்காமல் போகலாம். இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ப்ரியா சிங்கால் பேசுகையில், புதிதாக குழந்தை பெற்றெடுத்த பெண்கள் கொஞ்சம் சோகமாக, கவலையாக அல்லது சோர்வாகவோ இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (Postpartum depression) மற்றும் பேபி ப்ளூஸ் இரண்டிற்கும் சில அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டுமே வேறுபட்டது.

Postpartum depression என்பது நீண்டகாலம் இருக்க கூடிய விஷயம். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு சுமார் 15 சதவீதம் டெலிவரிக்களுக்கு பிறகு ஏற்படும் ஒன்றாக இருக்கிறது. இது கடுமையான மூட் ஸ்விங்ஸ், சோர்வு மற்றும் நம்பிக்கையற்ற உணர்வு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். இந்த உணர்வுகள் தீவிரமாக இருக்கும் பெண்கள் புதிதாக பிறந்த தங்கள் குழந்தைகளை பராமரிப்பதை மிகவும் கடினமாக மாற்றுகிறது என்றார். மகப்பேறுக் பிறகான மனச்சோர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம் இந்த அறிகுறிகளை சமாளிக்கலாம். இதிலிருந்து மீள தாய்மார்களுக்கு உதவும் சில ஊட்டச்சத்துக்களை இங்கே பார்க்கலாம்.

ஒமேகா 3:

ஒமேகா 3 ஊட்டச்சத்தானது தாயிடமிருந்து கருவுக்கும், அதன் பிறகு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கும் மாற்றப்படுகிறது. போதுமான அளவு ஒமேகா -3 எடுத்து கொள்வதன் மூலம் மூளையில் செரோடோனின் (Serotonin) போன்ற கேரிமூட் கெமிக்கல்ஸ்களை கொண்டு செல்லும் vesicles-களை வலுப்படுத்தப்படும். இதன் மூலம் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறிகளை குறைக்க ஒமேகா 3 உதவ கூடும்.

மெக்னீசியம்:

கர்ப்பத்தின் போது கரு மற்றும் நஞ்சுக்கொடி தாயிடமிருந்து குறிப்பாக மெக்னீசியத்தை அதிக அளவு உறிஞ்சுகிறது. அதே போல குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவும் குழந்தை பெற்றெடுத்த தாயின் உடலில் மெக்னீசியம் குறைகிறது. புதிய தாய் போதுமான அளவு மெக்னீசியம் எடுக்காமல் இருந்தால் ஒருகட்டத்தில் மெக்னீசியம் பற்றாக்குறை மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு ஏற்பட காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே குழந்தை பெற்ற பெண்கள் போதுமான அளவு மெக்னீசியம் எடுத்து கொள்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, அடிக்கடி பயம் ஏற்படுவது அல்லது பதட்டம் ஏற்படுவது உள்ளிட்ட உணர்வுகளை தணிக்க உதவுகிறது.

ஜிங்க்:

வாசனை மற்றும் சுவை உணர்வுகளுக்கு முக்கியமாக துத்தநாகம் எனப்படும் Zinc தேவையாக இருக்கிறது. இதுதவிர கர்ப்பம், கைக்குழந்தை பருவம் மற்றும் குழந்தைப் பருவத்தில் உடல் சரியாக வளரவும் துத்தநாகம் அத்தியாவசியம். இந்த ஊட்டச்சத்து இன்சுலின் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. குறிப்பாக உடல் பிற ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சவும் உதவுகிறது.

Related Posts

Leave a Comment