நீச்சல் பயிற்சி செய்ய போகிறீர்களா? அதற்கு முன் கவனிக்க வேண்டியவை

by Column Editor

உடற்பயிற்சிகளில் மிகவும் சிறந்த உடற்பயிற்சி நீச்சல் பயிற்சி என்றும் நீச்சல் பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவதுண்டு.

நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் உடல் பருமனை குறைக்கும் என்றும் நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும் என்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் நீச்சல் பயிற்சி செய்யும் போது சில அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். காலி வயிற்றுடன் அல்லது வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

மேலும் தகுந்த பயிற்சியாளரை அருகில் வைத்துக் கொண்டு நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் நீச்சல் பயிற்சியில் இறங்குவதற்கு முன்னர் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வைட்டமின் ஏ, இ க்ரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீர் இருந்தாலும் சருமம் பாதிக்கப்படாது.

Related Posts

Leave a Comment