தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.!

by Lifestyle Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,635க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மட்டும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனையானது.

இந்நிலையில் த்ங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.45,600க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 அதிகரித்து ரூ.5,700 ஆக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.50காசுகள் அதிகரித்து ரூ.79 50 காசுகளுக்கு விற்பனை ஆகி வருகிறது.

Related Posts

Leave a Comment