முகப்பருக்களை அகற்ற நேச்சுரல் டிப்ஸ்..!

by Lifestyle Editor

முகப்பரு பெரும்பாலும் உடலில் இருக்கும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும். ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. போதிய ஊட்டச்சத்து இல்லாமை, வயது, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளால் ஹார்மோன்களில் மாற்றம் உண்டாகும். இதனால், முகங்களில் முகப்பருகள் உண்டாகி, அசிங்கமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

பதின்பருவம், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஹார்மோன்களில் அதிகளவு மாற்றம் ஏற்படும். இதில் இருந்து விடுபடுவதற்கு என்ன வழி இல்லையா? என தேடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு சரியான டிப்ஸ் இங்கே கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.அதுவும் விழாக்காலத்தில் முகப்பருவுடன் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே முகங்களில் ஏற்படும் முகப்பருக்களை குணமாக்க முடியும். அது எப்படி? என்பதை பார்க்கலாம்

முகத்தை கழுவுதல் :

ஒரு நாளைக்கு பல முறை முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். தூசு, அழுக்குகள் முகத்தின் மேல் தோலில் இருந்தால், அவை ஹார்மோன்களால் ஏற்படும் முகப்பருக்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் உங்கள் முகத்தின் மேற்புறத்தை சுத்தமாக பராமரிக்கும்போது, முகப்பருக்கள் உருவாவது பெரும்பாலும் குறைந்துவிடும். பேஸ் வாஷ் மூலம் நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை முகத்தைக் கழுவலாம். இதன் மூலம் அழுக்கில்லாத முகத்தை பராமரிக்க முடியும்.

தண்ணீர் குடித்தல் :

எப்போதும் உடலில் நீர் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகப்பரு பிரச்சனைகள் இருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது முகப்பரு உருவாவதை உள்ளூர தடுத்துவிடும். தேவையற்ற மாசுகள் முகத்தில் படிந்து, அதன்மூலம் முகப்பரு உருவாவதையும் கிரீன் டீயில் இருக்கும் வைட்டமின்கள் தடுக்கின்றன.

முல்தானி மட்டி :

அனைத்து டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் ’முல்தானி மட்டி’ கிடைக்கும். இதனை வாங்கி, ரோஸ் வாட்டரில் மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். வாரத்தில் 2 முதல் 3 முறை இதனை அப்ளை செய்து வந்தீர்கள் என்றால் ஹார்மோன் பிரச்சனைகளால் உருவாகும் முகப்பருக்கள் எழாது. முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.

எண்ணெய் படியும் முகங்களாக இருந்தால், முல்தானி மட்டி ரை பயன்படுத்தலாம். மெடிக்கல் மற்றும் ஸ்டோர்களில் விற்பனையாகும் ஜெல் மாய்ஸரைசரை வாங்கிக் உபயோகித்துக் கொள்ளுங்கள்.

ரெட்டினோல் :

ரெட்டினோல் அல்லது ரெட்டினாய்டுகளை வாங்கி உபயோகப்படுத்தலாம். வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் இந்த ஸ்கின் கீரிம், ஹார்மோன்கள் மூலம் உருவாகும் முகப்பருகளை முற்றிலும் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக, முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கிறது. சருமத்தில் அழுக்குகளையும் நீக்கும்.

தேயிலை ஆயில் :

முகப்பருக்கலாம் முகத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தேயிலை ஆயில், முகப்பரு பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு சிறந்த தீர்வாகும். சிறிதளவு எண்ணெய்யை எடுத்து முகப்பருக்கள் மீது தட வேண்டும். இது சருமத்தை உலர்த்தி, முகப்பருக்கள் உருவாவதையும் தடுக்கிறது. தூங்கச் செல்வதற்கு முன்பு இரவு நேரங்களில் தேயிலை ஆயிலை உபயோகிக்கலாம்.

மருத்துவர் ஆலோசனை :

ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முகப்பருக்கள் குறித்து மகப்பேறு மருத்துவரை நேரில் அணுகி, அதற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம். ஹார்மோன் மாற்றத்துக்கான உண்மையான விளக்கத்தை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்கள் சிகிச்சை அல்லது மருந்துகளுக்கு பரிந்துரைப்பார்கள். தேவையற்ற மன உளைச்சலால் அவதிப்படும் உங்களுக்கு இது சிறந்த நிவாரணமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment