126
ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 229 ரன்களை பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 34 ஓவரில் 129 ரன்களில் சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விராட் கோலி தனது 49 ஆவது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் ரன்னே அடிக்காமல் டக் அவுட் ஆனது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் விராட் கோலி டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை. எனினும் டக் அவுட் ஆன வகையில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.