மார்க்கெட்டில் பெண்கள் ஏலம்.. அடிச்சி புடுச்சி வாங்க முந்தும் பல்கேரியா ஆண்கள்..!

by Lankan Editor

பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோராவில், ஒவ்வொரு வசந்த காலத்திலும் சர்ச்சைக்குரிய “மணமகள் சந்தை” ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு கன்னிகழியாமல் இருக்கும் இளம் பெண்கள், அவர்களை ஏலம் எடுக்க வருபவர்கள் முன்பாக முன் அணிவகுத்துச் செல்வார்களாம். உள்ளூரில் இந்த சடங்கை “ஜிப்சி மணப்பெண் சந்தை” என்று அழைக்கின்றனர்.

பல்கேரிய அகாடமி ஆஃப் சயின்ஸின் இனவியலாளர் வெல்சோ க்ருஸ்டெவ் இந்த சடங்கு குறித்து பேசும்போது, “ஒரு மனிதன் அந்த சந்தையில் மனைவியை வாங்கவில்லை, மாறாக அவளுடைய கன்னித்தன்மையை வாங்குகிறான்” என்று கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, மணப்பெண்ணின் அந்த புதிய குடும்பம், அதிக பணம் கொடுத்து அந்த பெண்ணை வாங்குவதால் அப்பெண்ணை நடத்துவார்கள் என்கிறார்.

Hristos Georgiev, என்ற 18 வயது இளைஞர், 18 வயதான Donka Dimitrova என்ற பெண்ணின் தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேரம் பேசுகின்றார். அது தோராயமாக $7,500 முதல் $11,300 வரை அந்த பேரம் போகும். இது “சராசரி பல்கேரியரின் ஊதியத்தில் ஒரு வருடத்தின் மதிப்பை விட அதிகம்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தையில் பெண்களை ஏலத்தில் எடுக்க, வருடக்கணக்கில் இளைஞர்கள் உழைத்து காசு சேமிப்பதும் உண்டு.

Related Posts

Leave a Comment