தோசை சுட்டு வாக்குச் சேகரிக்கும் ராகுல் காந்தி!

by Lankan Editor

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, உணவகமொன்றில் தோசை சுட்டு வாக்குச்  சேகரிக்கும் பணியில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக  ராகுல் காந்தி தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் இன்று வீதியோரத்தில் காணப்பட்ட உணவகமொன்றுக்குள் நுழைந்த ராகுல் அங்கு தோசை சுடத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கட்சி உறுப்பினர்களும், பொது மக்களும் ராகுல் காந்தியை உற்சாகப்படுத்தினர். இது குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில்  வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment