தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் உள்ளதா ?

by Lifestyle Editor

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கருத்துக்கணிப்பு நடத்த, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று பதில் அளித்திருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

மக்களவைக் கேள்வி நேரத்தில் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு தடை விதிக்கும் திட்டம் இருக்கிறதா என்று கேள்விக்கு பதில் அளித்த மத்திய சட்ட அமைச்சர் தடை விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இன்று இல்லை என்று பதில் அளித்த மாநிலங்களவை கேள்வி நேரத்தில் பிஎஸ்என்எல் எப்போது 5ஜி சேவை ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிஎஸ்என்எல் நிறுவனத்தை பணம் கொழிக்கும் பசுவாக காங்கிரஸ் அரசு கருதியதாகவும் 4ஜி ஒதுக்காதது குறித்தும் காங்கிரஸ் சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்தர்சிங் ஹூடா, விளைபொருட்களின் குறைந்தபட்ச விலை குறித்து விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பினார் .

அதற்கு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசு அமைத்த குழு ஆய்வு செய்து வருகின்றது. இந்த குழுவில் விவசாய சங்கத்தின் பிரதிநிதி இடம்பெற்றிருக்கிறார். காங்கிரஸ் பொய் அரசியல் செய்து வருகிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக இரட்டை அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று பதில் அளித்தார்.

Related Posts

Leave a Comment