நெல்லை – சென்னை வந்தே பாரத் இன்றும் ரத்து..

by Lifestyle Editor

தென் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வந்தே பாரத் ரயில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் நெல்லை – தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என்றும் மதுரை – புனலூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி – ஈரோடு ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டவாளங்கள் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment