இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை

by Lankan Editor

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தர்மசாலாவில் இலங்கை நேரப்படி இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் பங்களாதேஷ் அணிக்கும் சகிப் அல் ஹசனும் தலைமை தங்கவுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகின்றது அவருக்கு பதிலாக ஹாரி புரூக் அணிக்குள் உள்வாங்கப்படவுள்ளார்.

இதேவேளை மஹமதுல்லாவிற்கு பதிலாக பங்களாதேஷ் அணி நசும் அஹமட் அல்லது மெஹிடி ஹசன் என மூன்றாவது சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment