ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பு – இன்று நடைபெறுகிறது ஐபிஎல் மினி ஏலம் ..

by Lifestyle Editor

16வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று பிற்பகலில் கொச்சியில் நடைபெறவுள்ளது.

இதுவரை 15 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் 16வது சீசன் நடைபெறவுள்ளது. கடந்த முறை மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், இந்த முறை மினி ஏலம் நடைபெறவுள்ளது. ஐபிஎல் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருந்த நிலையில், திருத்தப்பட்ட இறுதிக் கட்ட ஐபிஎல் பட்டியலில் 405 வீரர்கள் உள்ளனர். இதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), சாம் கர்ரன் (இங்கிலாந்து), கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே), நிகோலஸ் பூரண்(மேற்கிந்திய தீவுகள்) மற்றும் இந்தியாவின் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், ரீலி ரூசோ, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்டோர் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் கேட்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்சுக்கு 2 வெளிநாட்டவர் உள்பட 7 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். ரூ.20.45 கோடி கையிருப்பு உள்ளது. ஏலத்தில் செலவிடுவதற்காக அதிகபட்சமாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் ரூ.42¼ கோடியை கையிருப்பாக கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment