ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? – இன்று 2வது ஒருநாள் போட்டி …

by Lifestyle Editor

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலாவாதாக டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மா இதே மைதானத்தில் 8 ஆண்டுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியது குறிப்பிடதக்கது.

இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இன்றைய இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் உத்தேச பட்டியல் :

பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா அல்லது லாஹிரு குமாரா இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment