ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் படை? – இன்று இறுதிப் போட்டி

by Lifestyle Editor

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்களுக்கான ஜூனியர் 20 ஓவர் உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் இடம்பெற்றன. இதில், குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதேபோல் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்திய அணி அரைஇறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி அரைஇறுதியில் 3 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வலுவாக விளங்குவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Posts

Leave a Comment