நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

by Lankan Editor

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்க

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை வெள்ள மட்டத்தை அடையுமென திணைக்களம் கூறியுள்ளது.

இதனால் மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

குறித்த பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாகவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment