404
			
				            
							                    
							        
    சமீபத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இதில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா என்ற தீவில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவில் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கக நில நடுக்கவியல் துறை கூறியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து, நியூ கலிடோனியா, பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
