சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்தது …

by Lifestyle Editor

தங்கம் விலை தொடர்ந்து அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் 5,692 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 45,536 ரூபாய்க்கும் விற்பனையானது. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,680க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை 30 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி 82 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 5,717க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ56 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,736க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.82.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment