தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையாக தெரிய …

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பனீர் – 50 கிராம்.

தேன் – 1 ஸ்பூன். `

எலுமிச்சை – 1 ஸ்பூன்.

வைட்டமின்-E காப்ஸ்யூல் – 2. `

செய்முறை :

முதலில், கோப்பை ஒன்றை எடுத்து அதில் பனீர் சேர்த்து மசித்துக்கொள்ளவும்.

பின்னர், இதனுடன் இந்த எலுமிச்சை சாறை கலந்துக்கொள்ளவும்.

இப்போது, இதில் போதுமான அளவு தேன் சேர்த்து நன்கு மைபோல கலக்கவும்.

இதையடுத்து, பனீர் பேஸ்டில் வைட்டமின் E எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை மூடி, 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனென்றால், நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.

இதையடுத்து, ஈரம் இல்லாமல் முகத்தை நன்கு துடைக்கவும்.

இப்போது, முறையாக தயார் செய்த இந்த ஃபேஸ் பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும். முகத்தில் உள்ள புள்ளிகளை குணப்படுத்துவதுடன், சருமமும் பளபளப்பாக மாறும்.

Related Posts

Leave a Comment