கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சில சுற்றுலா தளங்கள் …

by Lifestyle Editor

கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே சுற்றுலா செல்வது மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது விடுமுறை காரணமாக குளிர்வாச ஸ்தலமான ஊட்டிக்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சென்றுக் கொண்டுள்ளனர். ஊட்டிக்கு சென்றால் பார்க்க அழகான ரம்மியமான சில இடங்கள் குறித்து பார்க்கலாம் .

தொட்டபெட்டா சிகரம் :

ஊட்டி நகரத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ள ரம்மியமான பகுதி தொட்டபெட்டா சிகரம். சுமார் 2,623 அடி உயரமுள்ள இந்த சிகரம் தென்னிந்தியாவின் மிக உயரமான மலை சிகரம் ஆகும். ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள தொட்டபெட்டாவிற்கு பேருந்து வசதியும் உள்ளது. விடியற்காலையிலேயே சூரிய உதயத்தில் சென்றால் ரம்மியமான காட்சிகளை பார்க்கலாம்.

தாவரவியல் பூங்கா :

ரொம்ப அலையாமல் சுற்றி பார்க்கவும், ரிலாக்ஸ் செய்யவும் பொட்டானிக்கல் கார்டன் அருமையான இடம். ஊட்டிக்கு உள்ளேயே இருப்பதால் ரொம்ப பயணிக்க அவசியமில்லை. கோடை பருவத்தில் அரசால் அங்கு நடத்தப்படும் மலர்கள் கண்காட்சி மிகவும் பிரபலமானது. ஏராளமான விதவிதமான பூக்களைக்கொண்டு பல்வேறு உருவங்களில் உருவாக்கப்படும் பூ வேலைப்பாடுகள் கண்களுக்கு விருந்தாகும்.

ஊட்டியில் அமைந்துள்ள 65 ஏக்கர் பரப்பளவிலான அழகிய ஏரி சுற்றுலா செல்பவர்களுக்கு சிறந்த ரிலாக்ஸ் இடம். இந்த ஏரிகளில் படகு சவாரி வசதியும் உள்ளது. துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து ஏரியில் இனிமையான படகு சவாரி செல்லலாம்.

Related Posts

Leave a Comment