பாக்கியலட்சுமி தொடரை விட்டு விலகுவதாக அறிவித்த கோபி …

by Lifestyle Editor
0 comment

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அவரை மொத்த சீரியல் ரசிகர்களும் திட்டி வந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு அவரது நடிப்பையும் அதிகம் பேர் பாராட்ட தொடங்கினார்கள்.

தற்போது கோபி, ராதிகாவுடன் அவரது வீட்டுக்கே வந்து இருப்பது போல தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான் பாக்யலக்ஷ்மி தொடரை விட்டு விலகுவதாக சதிஷ் அறிவித்து இருக்கிறார். இந்த முடிவை எடுக்க பல காரணங்கள் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.

Related Posts

Leave a Comment