ஐபிஎல் கிரிக்கெட் – டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதல்

by Editor News

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் ஏய்டன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணி இதுவரை விளையாடியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

இதேபோல் முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி ஒரு வழியாக கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது. அதுவும் 128 ரன் இலக்கை கடைசி ஓவரில் தான் எட்டிப்பிடித்தது. நடப்பு தொடரில் அந்த அணி 20 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் சரியான லெவன் அணி அமையவில்லை. இப்போதைக்கு கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

Related Posts

Leave a Comment