200
07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இவ்வருடம் 50 கிலோ யூரியா உர மூட்டையை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பயன்பெறும் விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 71000 ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையின் கீழ் இந்த உரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரண தொகுப்புகள் இன்று விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.