அட்சய திருதியை அன்று இதையெல்லாம் செய்யலாம் …

by Lifestyle Editor

2023 ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடும்.

ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ஆம் காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 வரை சொல்லப்படுகிறது.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கம் சேரும் என அர்த்தம் இல்லை. அதற்கு பதில், வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு மாறாக வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.

வீட்டில் தங்கம் பெறுக என்ன செய்யணும்? : சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி பெருகும் என அர்த்தம். கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது.

தங்கம் வாங்கும் யோகம் : ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஆடை, ஆபரணம் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடம் தன ஸ்தானம், வாக்கு குடும்ப ஸ்தானம். 11 ஆம் வீடு லாப ஸ்தானம். இந்த இரண்டு வீட்டின் அதிபதிகளும் சேர்ந்தால் தான யோகம் ஏற்படும். சுப வலிமை பெற்ற குரு, சுக்கிரன் சேர்க்கையாலும் தங்க ஆபரணம் அணியும் யோகம் ஏற்படும்.

அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை :

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானது. ஆனால், இந்த நாளில் பிளாஸ்டிக், அலுமினியம் அல்லது ஸ்டீல் பாத்திரங்கள் வாங்க வேண்டாம் என்பது ஐதீகம்.

அதேபோல, அட்சய திருதியை நாளில், வழிபாட்டுத் தலமோ, பெட்டகமோ, பணம் வைத்திருக்கும் இடம் அழுக்காக இருக்கக் கூடாது.

அட்சய திருதியை அன்று, சூதாட்டம், குடி, பொய் போன்ற எந்த விதமான தீய செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? : சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம். நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.

Related Posts

Leave a Comment