293
பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் இல்லாமல் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மேகன் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் எனவும், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் இருப்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் சுமார் 2,000 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.