கருவளையம் போக்கும் சூப்பர் டிப்ஸ் ..

by Lifestyle Editor

கருவளையம் மற்றும் சுருக்கங்களை நீக்க கண்களுக்குக் கீழே மாய்ஸ்சரைஸர் மற்றும் ஸ்கின் டோனர் பயன்படுத்தலாம். இல்லையெனில், ரோஸ் வாட்டரை தினமும் இரவு தூங்கும் முன் தடவலாம். ஆனால், இவை அனைத்தும் கருவளையத்தை முழுமையாக அகற்றாது, சற்று குறைக்கும்.

ஐ ஷேடோவை நீக்குவது எப்படி? : ஐ ஷேடோவை நீக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஒப்பனையை நீக்கிய பின், சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து முகம் முழுவதும் தடவவும். உங்கள் மேக்கப் முழுமையாக நீங்கும் வரை முகத்தை மசாஜ் செய்யவும். இதையடுத்து, முகத்தை துடைத்தால் போதும்.

முகத்திற்கு ஸ்க்ரப் செய்த பிறகு, முகத்தை க்ளென்சர் கொண்டு நன்றாகக் கழுவவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன், நல்ல பிராண்ட் நைட் க்ரீமை முகத்திற்கு உபயோகிக்கவும். இது கருமையான கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும்.

இயற்கையான முறையில் கருவளைத்தை நீக்க விரும்பினால், எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்களுக்கு கீழ் தடவி வந்தால், கருவளையம் குறைந்துவிடும். தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் நீங்கும்.

என்னதான் நாம் க்ரீம்களை பயன்படுத்தினாலும் உங்கள் கண்களுக்கு சரியான ஓய்வை கொடுக்க வேண்டியது அவசியம். குறைந்தது 7 மணிநேரமாவது உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்க வேண்டியது அவசியம்.

Related Posts

Leave a Comment