சண்டே ஸ்பெஷல்!- ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்

by Lifestyle Editor

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணியும், இரண்டாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இதேபோல் இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் ஏய்டன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Related Posts

Leave a Comment