புஜபீடாசனம்

by Lifestyle Editor

செய்முறை:

முதலில் கால்களை நீட்டியவாறு விரிப்பில் அமரவும். தலை, முதுகு, முதலியவை நேராக நிமிர்ந்து உட்காரவும். கைகளை தொடையோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும். அடுத்து கைகைளை தரையில் ஊன்றி புட்டப் பகுதியை மேலே தூக்கி கால்களை கைகளின் வெளிப்புறமாக வளைத்து போட்டு கணுக்கால்களை ஒன்றோடொன்று பின்னி கொள்ள வேண்டும். இப்போது உடல் பாரம் முழுவதும் தரையில் ஊன்றப்பட்டிருக்கும் கைகளின் மீதே இருக்கும். இந்த நிலையில் சில வினாடி இருந்த பின்பு கால்களை விடுவித்து அவற்றின் முழங்கால்கள் கைகளின் புஜங்களின் மீது பதித்து இருக்கும் விதத்தில் சில நிமிடங்கள் இருக்கவும்.பத்து முதல் 20 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

பயன்கள்

இந்த ஆசனம் தோள்களுக்கு பிரமாதமான வலிமையை கொடுத்து மூளையின் ஆற்றலை அதிகப்படுத்தும். இருதய ரோகங்களை நீக்கும். கழுத்து பகுதிக்கு சரியான இரத்த ஓட்டத்தை அளிக்கும். பெண்கள் இந்த ஆசனத்தை பொதுவாக செய்து வந்தாலும் பிரசவம் எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும் அமையும். ஆனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. உங்கள் மணிக்கட்டு, கைகள், கைகள், மார்பு, தோள்கள் மற்றும் மேல் முதுகில் வலிமையடையும். இடுப்பு நெகிழ்வு மற்றும் தொடை எலும்புகளில் நெகிழ்வுத்தன்மை அடைகிறது. ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும் போது நீண்ட நேரம் நிலைநிறுத்துவதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். மணிக்கட்டில் அசௌகரியம் அல்லது வலியை உணர்ந்தால், இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. உங்கள் தோள்கள், முழங்கைகள் அல்லது கீழ் முதுகில் பிரச்சனை இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.

Related Posts

Leave a Comment