சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன ..

by Lifestyle Editor

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 6வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 6வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை அணி கடைசி வரை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதேபோல் முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய லக்னோ அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment