மார்ச் 28ம் தேதி இந்த 5 கிரகங்களை ஒன்றாக வானில் பார்க்கலாம் ..

by Lifestyle Editor

வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்தவகையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி ஒரு அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு நிலவு உட்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல், ஆர்ச் போல காணப்படும். ஃபாக்ஸ் நியூஸின் அறிக்கையின்படி, மார்ச் 28 அன்று சூரியன் மறைவுக்குப் பிறகு நீங்கள் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும்.

வெளியாகி உள்ள தகவல்படி, வியாழன் புதனை விட பிரகாசமாக காணப்படும். அதே சமயம் வீனஸ் அனைத்து கிரகங்களை விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, “வியாழன் மற்றும் புதனின் மேல் இடதுபுறத்தில் வீனஸ் பிரகாசமாக இருக்கும்” என்று லைவ் மிண்ட் அறிக்கை கூறியது. எல்லாவற்றிலும் மிகவும் திகைப்பூட்டும் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இவற்றில் யுரேனஸ் காண்பதற்கு மிகவும் கடினமாக காட்சியளிக்கும் கிரகணம் ஆகும். மேலும், யுரேனஸ் வீனஸுக்கு அருகில் தோன்றும், ஆனால் மிகவும் மங்கலாகத் காணப்படும். செவ்வாய் கிரகமும் வானத்தில் மிக உயரமாகத் தோன்றும் மற்றும் குறிப்பிடத்தக்க சாயலைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றனர்.

நாசாவின் கூற்றுப்படி, “கோள்கள் தோராயமாக ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதன் காரணமாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நடைபெறும்கிறது. இதனால் தான், சில சமயங்களில் கிரகணங்களை நம்மால் வெறும் கண்களில் காண முடிகிறது.

Related Posts

Leave a Comment