276
			
				            
							                    
							        
    அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்து வருவதால், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இறக்குமதி தடையை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சிடம் தாம் முன்னர் கோரிக்கை விடுத்ததாக அதன் செயலாளர் கூறியுள்ளார்.
மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாததால், இறக்குமதியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
