159
ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கே ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கள்வர்களை பாதுகாப்பதற்கும் அவர்களை, அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கும் ஜனாதிபதி தொடர்ந்தும் இடமளித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி ஒருவரை பதவியில் நீடிக்கவைப்பதற்கு பாலித ரங்கே பண்டார முயற்சிப்பதாகவும் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக மாத்திரமே நியமிக்கப்பட்டதாகவும் அவவர் தெரிவித்துள்ளார்.