செந்திலை கைது செய்த போலீஸ் – அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

by Lifestyle Editor
0 comment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் செந்தில் அப்பாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்று மர்மங்கள் அமுதாவுக்கு தெரிய வந்த நிலையில் இன்றைய எபிசோடில் Correspondent வீட்டுக்கு வர அமுதா அவரிடம் மறைமுகமாக செந்தில் ஆசிரியனாவான் , அப்பா விட்டதை பிடிப்பான் என சொல்கிறாள்.

அடுத்து கரஸ் வெளியே வந்து காரில் இருக்கும் குமரேசனிடம் அவர்களை விடக் கூடாது என சொல்கிறார். பிறகு HOD இன்னும் ஒரு மாதத்தில் எக்சாம் இதில் பெயிலானால் அதன் பிறகு படிக்க முடியாது என சொல்கிறார். அதை பியூன் மூலம் வில்லன்களும் அறிகின்றனர்.

பின்னர் அமுதா,செந்தில் இருவரும் ஓரிடத்தில் டீ குடிக்க நிற்க, அமுதா செந்திலிடம் HOD சொன்ன விஷயத்தை சொல்கிறாள். இந்த நேரத்தில் அங்கிருக்கும் ஒருவன் அமுதாவை சீண்ட செந்தில் அவனை அடிக்க, அவன் பாட்டிலை கொண்டு குத்த வர, செந்தில் பாட்டிலை பிடுங்கி அவன் தலையில் அடித்து சண்டை போடுகிறான். இதனால் போலீஸ் செந்திலை அடிதடி வழக்கில் கைது செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment