அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடினார் அர்யானா சபெல்க்கா

by Lankan Editor
0 comment

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் பெலரஸ் வீராங்கனை அர்யானா சபெல்க்கா வெற்றிபெற்றுள்ளார்.

கஸகஸ்தான் வீராங்கனை எலைனா ரைபகினாவுடன் இறுதி போட்டியில் மோதிய அவர், முதல் செட்டை 4-6 என இழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டெழுந்த அர்யானா சபெல்க்கா, அடுத்த செட்களை 6-3 மற்றும் 6-4 என்ற அடிப்படையில், வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இது பெலரஸைச் சேர்ந்தவர் வீரர் அல்லது வீராங்கனை பெறும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment