பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர நிலநடுக்கம் – மக்கள் பீதி

by Lifestyle Editor

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர், அதன் மையம் இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது.

நிலநடுக்கத்தால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டிடங்கள் குழுங்கியதால், மக்கள் அலறி அடித்துக்கொண்டு சாலை மற்றும் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் மற்றும் உயிர் சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related Posts

Leave a Comment