பனிமூட்டத்தால் சீனாவில் பயங்கர விபத்து.. வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 17 பேர் பலி..

by Lifestyle Editor

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் அதிகளவு பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதிலும் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதேபோல் பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால் வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்ட போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். ஆனாலும், கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நன்சாங் கவுண்டி பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சாலை விபத்து அதிகாலை 1 மணிக்கு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி வெளியான சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நன்சாங் மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறையினர், விபத்து நடந்த பகுதியில் ‘மூடுபனி வானிலை’ நிலவுவதாகக் கூறி அவ்வழியே செல்லும் மற்ற ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினர். பனிமூட்டம் அதிக அளவில் இருப்பது, போக்குவரத்து விபத்துக்களை எளிதில் ஏற்படுத்தும் என்றும், வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்ட வேண்டும் என்றும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம், மித வேகத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் தொடர்கதையாகி வருவதாக விமர்சனங்களும் எழுகின்றன.

Related Posts

Leave a Comment