சென்செக்ஸ் 981 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 981 புள்ளிகள் சரிவு கண்டது.

ஜப்பானில் நுகர்வோர் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, சீனா வழியாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியிருப்பது, முதலீட்டாளர்கள் லாப நோக்கி கருதி பங்குகளை விற்பனை செய்தது, அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை,வேலையின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் நிறுவன பங்கினை தவிர்த்து மற்ற 29 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 476 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 3,112 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 67 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.272.29 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.8.19 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 980.93 புள்ளிகள் குறைந்து 59,845.29 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 320.55 புள்ளிகள் சரிவு கண்டு 17,806.80 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment