ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து நான் விலக வேண்டுமா?? கருத்து கணிப்பு கேட்ட எலான் மஸ்க் ..

by Lifestyle Editor

ட்விட்டர் தலைவர் பதவியில் தான் தொடர்ந்து நீடிக்கலாமா அல்லது விலக வேண்டுமா என்று எலான் மஸ்க் , ட்விட்டர் பயனர்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு கேட்டுள்ளார்.

ட்விட்டர் எலான் மஸ்க் கைவசம் வந்ததும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துக்கும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. முதல்கட்டமாக ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி உள்பட உயர் அதிகாரிகள் பலரையும் பதவி நீக்கம் செய்தார். தொடர்ந்து 50% ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ட்விட்டரை புதுப்பிக்கும் பணிக்கு நிர்ணயத்த காலக்கெடு வரை பொறியாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் பணியாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் நிறுத்தப்பட்டது.

இந்த விதிகளுக்கு உட்பட்டு வேலை செய்யப் போகிறீர்களா?? அல்லது 3 மாத ஊதியத்துடன் வெளியேறுகிறீகளா?? என்றும் எலான் மஸ்க் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பல ட்விட்டர் பணியாளர்கள் வேலையை ராஜினாமா செய்யத் தொடங்கினர். அத்துடன், ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மாதம் கட்டணம் செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும் முன்னதாக ட்விட்டரில் தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் இணைத்தார்.

இப்படியாக தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் எலான் மஸ்க், பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், தான் ட்விட்டர் தலைவர் பதவியில் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமா?? அல்லது பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று கேட்டுள்ளார். மேலும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மஸ்க், பதிவிட்ட ட்விட்டர் கருத்துக்கணிப்பில், 88 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 56.7% வாக்குகள் மஸ்க்கிற்கு எதிராக, அதாவது அவர் பதவி விலக வேண்டும் என்றும், 43.3% வாக்குகள் மஸ்க்கிற்கு ஆதரவாகவும் வாக்களிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment