பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னர் இவர்தானா ? வெளியான தகவல் …!

by Lifestyle Editor

பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளரில் பிக் பாஸ் டைட்டில் வின்னராகும் போட்டியாளர் இவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 :

பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் 9 ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரைக்கும் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்.

இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மற்றும் இலட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார் .

இதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்கான தெரிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .

மேலும் கடந்த வாரங்களில் மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று அசீம் எலிமினேட்டாகாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வரும் நிலையில் அவர் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராவார் என தகவல் வெளியாகியது.

ஆனால் மக்களின் மனதிலும் சக போட்டியாளர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நேர்மையாகவும் அனைவராலும் கவரக்கூடிய வகையில் செயற்பட்டு வருகிறார் சிவின் கணேஷன் .

இதன்படி, மக்களின் ஆதரவும் சிவினின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மக்களும் சிவின் தான் வின்னர் என்றும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment