இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் கூண்டோடு நீக்கம் – பிசிசிஐ அதிரடி !

by Lifestyle Editor

டி20 உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினரை கூண்டோடு நீக்கி பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி. இந்திய அணி தைரியமின்றி தயக்கத்துடன் விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.

இந்த நிலையில் டி20 உலககோப்பை தொடர் தோல்வி எதிரொலியாக சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிசிசிஐ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஜெய் ஷா அறிவித்துள்ளார். புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க என்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது குறைந்தபட்சம் 30 முதல் வகுப்பு போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டி 20 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment