ப்ளூ டிக் கட்டணம் எப்போது? எலான் மஸ்க் அறிவிப்பு !

by Lifestyle Editor

ட்விட்டரில் ப்ளூ டிக் பெற மாதாந்திர கட்டணம் எப்போதிலிருந்து செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தற்போது அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ட்விட்டர் செயலியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில் ட்விட்டரில் அதிகமான ஃபாலோவர்களை கொண்ட அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ள நிலையில் இந்த ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதித்துள்ளார். அமெரிக்காவில் ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர் என்றும், இந்தியாவில் ரூ.719 என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ப்ளூடிக் கட்டண முறை அமலுக்கு வருவதாக சில நாட்கள் முன்னதாக எலான் மஸ்க் அறிவித்தார். ஆனால் போலி கணக்குகள் ப்ளூ டிக் பெறுதல் போன்ற சம்பவங்கள் நடந்ததால் தற்காலிகமாக கட்டணம் அமலுக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டது.தற்போது அக்கவுண்ட் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் 29ம் தேதி முதல் ப்ளூடிக் கட்டண முறை அமலுக்கு வருவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு சில மாதங்களுக்கு கட்டணம் செலுத்தாவிட்டால் ப்ளூடிக் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment