தனுராசனம்

by Lifestyle Editor

தனுராசனம் ஆசனம் செய்யும்போது பார்ப்பதற்கு கைகள் நாண் கயிறாகவும், உடல் வில்லாகவும் தோற்றம் தருவதால் இதற்கு தனுராசனம் என்று பெயர். இது நமது முதுகையும், முதுகு தண்டையும் பலப்படுத்தும் ஆசனமாகும். பெருத்த வயிற்றைக் குறைக்க இதை செய்யலாம். முக்கியமாக தனுராசனம் வயிற்றுப்பகுதிக்கு மிக நல்ல ஆசனம்.

செய்முறை:

முதலில் தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ளவேண்டும், பிறகு இரு கால்களையும் நன்கு அகற்றி பின்புறமாக மடக்கி உயர்த்தி கொள்ளவேண்டும். அதன்பின் இரு கைகளையும் பின்புறமாக கொண்டு சென்று இருக்கால்களையும் பிடித்துக் கொள்ளவேண்டும்

பின்னர் சுவாசத்தை மெதுவாக உள் இழுத்து ஒரே சமயத்தில் தலை, கழுத்து, மார்பு ஆகியவைகளை மேல் எழும்புமாறு தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் தரைப்பகுதியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு வில் போன்று வளைந்து காணப்படும். முதலில் செய்ய பழகும்போது ஆறு வினாடிகள் என தொடங்கி படிப்படியாக வினாடிகளை அதிகரித்து கொள்ளாலாம்.

பலன்கள்:

உடல் பின்னோக்கி வளைக்கப் படுவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் ரத்தக் குழாய்கள் நன்கு செயல்படும். இதனால் அதிகப்படியான பிராணவாயு நமது உடலுக்கு கிடைக்கும். வாயுத் தொல்லைகள் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை போக்கும். தட்டையான வயிற்றினை பெறலாம்.

Related Posts

Leave a Comment