ஸ்கொட்லாந்தில் 14 பேரில் ஒருவருக்கு கொவிட் தொற்று!

by Column Editor

ஸ்கொட்லாந்தில் 14 பேரில் ஒருவருக்கு கடந்த வாரம் கொவிட் தொற்று இருந்ததாகவும் இது ஒரு புதிய சாதனை உயர்வாகும் எனவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாராந்திர தேசிய புள்ளியியல் அலுவலக மாதிரிகள் மார்ச் 12ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 376,300 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பிரித்தானியாவில் மிக அதிக வீதத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

சமீபத்திய எழுச்சி ஒமிக்ரோனின் பி.ஏ.2 துணை மாறுபாட்டால் இயக்கப்படுகிறது என நம்பப்படுகிறது.

ஸ்கொட்லாந்தில் வைரஸ் பரவும் வீதம் அல்லது ஆர். எண் உயர்ந்துள்ளது. இது இப்போது 1 மற்றும் 1.3க்கு இடையில் இருப்பதாக கருதப்படுகிறது.

ஆர். எண் என்பது, பாதிக்கப்பட்ட ஒருவரால் எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதற்கான அளவீடு ஆகும்.

Related Posts

Leave a Comment