சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள் : பலரும் தொழில் வாய்ப்பினை இழக்கும் அபாயம்!

by Column Editor

நாட்டில் அடுத்தடுத்து சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

எதிர்காலத்திலும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையிலுள்ள சுமார் 5 லட்சம்பேர் பாதிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சூழலில் பலர் தொழில்களை இழந்துள்ளனர் எனவும், ஹோட்டல்களுக்கான வாடகைப் பணத்தைகூட செலுத்த முடியாமல், உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சில ஹோட்டல்கள் திறக்கப்பட்டிருந்தாலும் அங்கு கொத்து ரொட்டி, ரைஸ் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை எனவும், விறகை பயன்படுத்தியே கடும் சவால்களுக்கு மத்தியில் சமையல் இடம்பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment