தினசரி தொற்று பாதிப்பு ரிசல்ட்… இன்றைய நிலவரம் என்ன?

by Column Editor

இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 2,528 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை முடிந்து தற்போது 4ஆம் அலை ஜூன் மாதம் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 149 பலியான நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,16,281 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரேநாளில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,997 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,24,58,543 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,181 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 180.97 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.73% ஆகவும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.07% ஆகவும் உள்ளது என்றும், தினசரி பாதிப்பு விகிதம் 0.40% ஆக பதிவாகி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment