உக்ரைன் அகதிகளை வேலைக்கு அமர்த்த பிரித்தானிய நிறுவனங்கள் முயற்சி!

by Column Editor

உக்ரைனிய அகதிகள் பிரித்தானியாவிற்கு வரத் தொடங்கும் போது, முக்கிய பிரித்தானிய வணிக நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைகளை வழங்க வரிசையில் காத்து நிற்கின்றன.

ரஷ்யாவின் படையெடுப்பால் வெளியேற்றப்பட்டவர்கள் பிரித்தானியாவிற்கு வருவதை எளிதாக்க 45க்கும் மேற்பட்ட பெரிய வணிகங்களின் குழு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.

மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், அசோஸ், லஷ் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான ரொபர்ட் வால்டர்ஸ் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் ஆகும்.

உக்ரைன் அகதிகள் நெருக்கடிக்கு அதன் பிரதிபலிப்பின் வேகம் மற்றும் அளவு குறித்து அரசாங்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது.

எண்டர்பிரைஸ் அலுமினியின் தலைமை நிர்வாகியான பிரிட்டிஷ் தொழிலதிபர் எம்மா சின்க்ளேர் தலைமையில் இந்த முயற்சி நடைபெறுகிறது.

Related Posts

Leave a Comment