அதிவேகத்தில் பயணம், விபத்து.. Patym நிறுவனர் விஜய் சேகர் சர்மா கைது..!

by Lifestyle Editor

சொகுசு காரில் அதிவேகமாக பயணம் செய்து, டி.சி.பி-யின் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற Paytm நிறுவனர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்தியா முழுவதும் பணப்பரிவர்தனைக்கு பெருமளவு உபயோகம் செய்யப்பட்டு வரும் Paytm செயலின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் விஜய் சேகர் சர்மா.

இவர் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வசித்த வரும் நிலையில், பிப். மாதம் 22 ஆம் தேதி மதர் பள்ளியின் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது, நிகழ்விடத்தில் டெல்லி தெற்கு மாவட்ட காவல் ஆணையர் பெனிடா மேரி ஜெய்க்கர் தலைமையிலான காவல் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நேரத்தில், அதிவேகத்தில் வந்த விஜய் சேகர் சர்மா, சாலையோரம் இருந்த காவல் ஆணையரின் காரில் மோதிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காரை இயக்கி சென்றது Paytm நிறுவனர் என்பது உறுதியானது.

அவரின் மீது கைது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், விஜய் சேகர் சர்மாவை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவல் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment